தேவை மனக்கட்டுப்பாடு
ADDED :1826 days ago
மனம் போன போக்கில் செயல்படுபவர்களை முட்டாள்கள் என்கிறார் நாயகம். எனவே மனிதன் கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும். மனதை அடக்கியாள முதலில் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். அதுவும் உண்மையை மட்டும் பேச வேண்டும். அப்போது இதயமும் நேர்வழியில் செல்லும். வார்த்தைகள் மோசமாக இருந்தால் அதன் விளைவும் மோசமாக இருக்கும். ஒரு செயலில் ஈடுபடும் முன் அதன் முடிவை சிந்திக்க வேண்டும். பிறரிடம் ஆலோசனை கேட்பதில் தவறில்லை. ஆனால் மனதிற்கு நல்லதாக தோன்றுவதை தேர்ந்தெடுத்து ஈடுபட வேண்டும். அப்போது வெற்றியடைவது உறுதி.