உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அமாவாசை இரவு அடைப்பு

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அமாவாசை இரவு அடைப்பு

ஆனைமலை: தமிழகத்தின் முக்கிய ஆன்மிக தலமான, கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில், லட்சக்கணக்கான பக்தர்கள், வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர்.


அமாவாசை அன்று இரவு முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும். இந்த மாதத்துக்கான சர்வ அமாவாசை வரும், 14ம் தேதி மதியம், 2:05 மணிக்கு துவங்கி, 15ம் தேதி காலை, 11:46 மணி வரையில் நீடிக்கிறது.கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், அரசு உத்தரவுப்படி, 14ம் தேதி அமாவாசையை முன்னிட்டு, தீபாவளியன்று இரவு, 8:00 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். பக்தர்கள் சாதாரண நாட்களைப்போல காலை, 6:00 முதல், இரவு, 8:00 மணி வரை அம்மனை தரிசிக்கலாம். சமூக இடைவெளி பின்பற்றி, முகக்கவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !