செய்வினை, ஏவலில் இருந்து தப்பிக்க பரிகாரம் உண்டா?
ADDED :1887 days ago
செய்வினை, ஏவலில் ஈடுபடுவது மகாபாவம். ஒரு கட்டத்தில் செய்பவர்களை அது திரும்ப தாக்க ஆரம்பிக்கும். மற்றவர்கள் யாராவது உங்களுக்கு செய்திருப்பதாக தெரிந்தால் தெய்வத்தை சரணடைவதே வழி. ராகு காலத்தில் துர்க்கைக்கு அல்லது சரபேஸ்வரருக்கு அர்ச்சனை செய்வது நல்லது. தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபடுவது நன்மையளிக்கும்.