உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலை கோவிலுக்கு 2 உதவி ஆணையர் பணியிடம்

தி.மலை கோவிலுக்கு 2 உதவி ஆணையர் பணியிடம்

 சென்னை:திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், புதிதாக இரண்டு உதவி ஆணையர் பணியிடங்கள் ஏற்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு, உதவி ஆணையர் நிலையில், இரண்டு பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என, சட்டசபையில், துறை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப் பட்டது.அதன்படி, இரண்டு பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இப்பணியிடங்களை, அயற்பணியில் நிரப்பிட, ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனருக்கு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இப்பணியிடங்களால், ஆண்டுக்கு, 18.03 லட்சம் ரூபாய், தொடர் செலவினம் ஏற்படும். இதை கோவில் நிதியிலிருந்து மேற்கொள்ளவும், அனுமதி தரப்பட்டுள்ளது.

 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !