உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறியூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

சிறியூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

கோத்தகிரி: ஊட்டி அருகே எழுந்தருளியுள்ள சிறியூர் மாரியம்மன் கோவிலில், தீபாவளி அமாவாசையை ஒட்டி, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.  நீலகிரி மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சிறியூர் மாரியம்மன் கோவிலில், வருடாந்திர திருவிழா சிறப்பாக நடக்கிறது. தவிர, மாதந்தோறும், அமாவாசை நாளில் பூஜை நடக்கிறது.

இம்மாதம், தீபாவளி அமாவாசை நாளான நேற்று காலை, 9:00 மணிக்கு, அம்மனுக்கு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜை நடந்தது. மாலை, 4:30 மணிவரை, வழக்கத்திற்கு மாறாக, திரளான பக்தர்கள்  பங்கேற்று, அம்மனை சமூக இடைவெளியில் நின்று வழிபட்டனர். தொடர்ந்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கூக்கல்  எட்டூர் இளைஞர்கள், பக்தர்களை முக கவசம் அணிந்து சமூக இடைவெளியில் சுவாமி தரிசனம் செய்யவேண்டும் என வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !