கந்த சஷ்டி விரத காப்பு கட்ட கோயில்களில் அனுமதி மறுப்பு
கம்பம் : கந்த சஷ்டியை முன்னிட்டு கோயில்களில் காப்பு கட்டி விரதத்தை துவக்க வந்த பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பெண் பக்தர்கள் கொதிப்படைந்தனர்.
கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில், வேலப்பர் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு கைகளில் கங்கணம் கட்டி விரதத்தை துவக்க ஏராளமான பக்தர்கள் வந்தனர். கோயில் வளாகத்தில் கங்கணம் கட்ட அனுமதி இல்லை. சாமி அலங்காரம் முடிந்தபின் ஒவ்வொரு பக்தராக வந்து தரிசனம் செய்ய அறிவுருத்தப்பட்டது. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தனர். அரசு உத்தரவு பின்பற்ற வேண்டும்என கோயில் நிர்வாகம் கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். வீடுகளில் கங்கணம் கட்டி விரதத்தை துவக்கினார்கள். முன்னதாக முருகப்பெருமான் கோயில்களில் சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. திருக்கல்யாணம், சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.