உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதிக்கு 20ம் ஆண்டாக பாத யாத்திரை : ஆட்டையாம்பட்டி பக்தர்கள் தொடங்கினர்

திருப்பதிக்கு 20ம் ஆண்டாக பாத யாத்திரை : ஆட்டையாம்பட்டி பக்தர்கள் தொடங்கினர்

வீரபாண்டி: ஆட்டையாம்பட்டியில் இருந்து திருப்பதிக்கு, 20வது ஆண்டாக, 20 பக்தர்கள், பாத யாத்திரை தொடங்கினர். சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி சுற்றுவட்டாரங்களை சேர்ந்த குழந்தைகள், பெண்கள் என, 20 பக்தர்கள், திருப்பதி கோவிலுக்கு பாதயாத்திரை செல்ல, கடந்த மாதம் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.


நேற்று முன்தினம் பெத்தாம்பட்டி சென்றாய பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜை செய்து, இருமுடி கட்டி அன்னதானம் செய்தனர். நேற்று காலை, 6:00 மணிக்கு, திருமலை திருப்பதிக்கு பயணத்தை தொடங்கினர். இதுகுறித்து, ௨௦வது ஆண்டாக, பயணம் செல்லும் குருசாமி ராமானுஜதாசர் கூறியதாவது: தினமும் காலை, 3:00 மணிக்கு எழுந்து குளித்து முடித்து தயாராகி, 4:00 முதல், காலை, 10:30 மணி வரை நடைபயணம் செய்வோம். கோவில், மடம், தாசர் வீடுகளில் தங்குவோம். மீண்டும் மாலை, 5:00 மணிக்கு தொடங்கி, இரவு, 11:00 மணி வரை நடப்போம். ஒரு நாளில், 40 கி.மீ., வரை பயணித்து, 10 நாளில் திருமலையை அடைந்து விடுவோம். தரிசனம் முடித்து, மலையில் இருந்து நடந்து வந்து, ரயிலில் ஏறி சேலம் வழியாக ஊர் திரும்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !