அனுமன் ஜன்மபூமியான கிஷ்கிந்தையில் 215 மீ., உயர அனுமன் சிலை
ADDED :1887 days ago
அயோத்தி : கர்நாடகாவில் உள்ள கிஷ்கிந்தையில் 215 மீ. உயர அனுமன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனுமன் ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர்சுவாமி கோவிந்த் ஆனந்த் சரஸ்வதி கூறியதாவது: கர்நாடக மாநிலம் ஹம்பியின் புறநகர் பகுதி தான் கிஷ்கிந்தையாக கருதப்படுகிறது. இங்கு தான் அனுமன் வாலி சுக்ரீவன் உட்பட ராமாயணத்தில் வரும் அனைத்து வானரர்களும் அவதரித்தனர். அனுமன் ஜன்மபூமியான கிஷ்கிந்தையில் 1200 கோடி ரூபாய் செலவில் 215 மீ. உயர அனுமன் சிலையை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்துள்ளோம். அயோத்தியில் 221 மீ. உயர ராமர் சிலை அமைக்க உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. அதை விட அனுமன் சிலை உயரமாக இருக்க கூடாது என்பதால் 215 மீ. உயரத்தில் அமைக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.