உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பன் கோயிலில் மாலையணிந்த பக்தர்கள்: விரதம் துவக்கம்

ஐயப்பன் கோயிலில் மாலையணிந்த பக்தர்கள்: விரதம் துவக்கம்

ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மாலையணிந்து முதல் நாள் விரதத்தை துவக்கினர். அதிகாலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. ஐயப்பன் பக்தி பாடல்கள், நாமாவளி, ஸ்தோத்திரம் செய்து வழிபட்டனர். வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்சமாதா ஆகிய மூலவர்கள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.கோயில் தலைமை குருசாமி மோகன்சாமி கூறுகையில், கார்த்திகை முதல் மார்கழி வரையுள்ள 60 நாட்களும் இரவு நேரத்தில் பஜனையும் ஞாயிற்றுக்கிழமை உலக நன்மைக்கான கூட்டுப்பிரார்த்தனை, அன்னதானம் நடக்க உள்ளது.

சபரிமலையில் கடைப்பிடிப்பதை போன்ற சுயகட்டுப்பாடு, ஒழுக்க நெறியுடன் போதிக்கப்படுகிறது என்றார். ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

* சாயல்குடி அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில் ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதத்தை துவக்கினர்.

* சிக்கல் சிவதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதம் மேற்கொண்டனர். நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது.

* கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து கொண்டனர். குருநாதர் நாகராஜ் ஏற்பாடுகளை செய்திருந்தார்.ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் வல்லபை ஜயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு மாலை அணிந்த ஜயப்ப பக்தர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !