சத்ய சாய்பாபா 95வது பிறந்த நாள் விழா: ரத்தோத்ஸவம் நேரலையில் ஒளிபரப்பு
ADDED :1803 days ago
புட்டபர்த்தி : சத்ய சாய்பாபாவின் 95வது பிறந்த நாள் விழா புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பாரம்பரிய ரத்தோத்ஸவம் திருவிழா மற்றும் ஸ்ரீ சத்ய சாய் சத்தியநாராயண பூஜை ஆகியவை இன்று பிரசாந்தி நிலையத்தில் நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சிகளை https://www.youtube.com/channel/UC5j7MGcyU9wh15gbkvNO3aw என்ற பிரசாந்தி மந்திர் லைவ் சேனல் மற்றும் sri sathya saibaba என்ற பேஸ்புக் பகுதிக்கு சென்று காலை 8.00 மணி முதல் நேரலையில் காணலாம்.