உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றத்து கோயிலில் நவ., 20 நடை திறப்பு நேரம் மாற்றம்

குன்றத்து கோயிலில் நவ., 20 நடை திறப்பு நேரம் மாற்றம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நவ., 20 மாலை 4:00 மணிக்கு பதில் மாலை 6:30 மணிக்கு நடை திறக்கப்படும்.

சூரசம்ஹாரம் வழக்கமாக சன்னதி தெரு சொக்கநாதர் கோயில் முன் பக்தர்கள் முன்னிலையில் நடக்கும். இந்தாண்டு கொரோனா தடையுத்தரவால் பக்தர்கள் அனுமதியின்றி கோயிலுக்குள் நடக்கிறது. காலை கோயில் நடை வழக்கம் போல் காலை 5:30 மணிக்கு திறக்கப்பட்டு, மதியம் 12:30 வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு நடை சாத்தப்படும். மாலை 4:30 முதல் மாலை 5:30 மணி வரை கோயிலுக்குள் திருவாட்சி மண்டபத்தில் சூரசம் ஹாரம் நடக்கிறது. பின் சுவாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி முடிந்து சேர்த்தியாகும். மாலை 6:30 மணியிலிருந்து தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !