முத்துமாரியம்மன் அவதார தினம்
ADDED :1867 days ago
காரைக்குடி : காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான நேற்று பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர். மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த 65வது ஆண்டான நேற்று, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.ஆண்டுதோறும், அம்மன் அவதரித்த தினத்தில் பக்தர்கள் 1008 பால்குடம் எடுத்தும், கஞ்சி வழங்கியும் நேர்த்திகடன் செலுத்துவர். அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறும். தற்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, பக்தர்கள் அதிகளவில் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த ஆண்டை விட குறைவான பக்தர்களே பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.