திருப்பரங்குன்றத்து கோயிலில் நவ., 21ல் இரு விழாக்கள்
ADDED :1798 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவ., 21 அன்று கார்த்திகை திருவிழா கொடியேற்றமும், சஷ்டி திருவிழா நிறைவும் நடக்கிறது.
கோயிலில் சஷ்டி திருவிழாவின் 5ம் திருவிழாவான வேல் வாங்கும் நிகழ்ச்சி இன்று (நவ., 19) மாலை 6:30 மணிக்கு நடக்கிறது. நாளை சூரசம்ஹாரம், நவ., 21 மாலை 4:00 மணிக்கு பாவாடை நைவேதன தரிசனம் நடக்கிறது.நவ., 21 காலை 7:15 மணிக்கு கார்த்திகை திருவிழாவிற்கான கொடியேற்றம் நடக்கிறது. நவ., 29ல் மலைமேல் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. பக்தர் களுக்கு அனுமதியில்லை.கொரோனா தடை உத்தரவால் கார்த்திகை திருவிழா உற்ஸவ நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயிலுக்குள் நடத்தப்படுகிறது என கோயில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்தார்.