கந்தசஷ்டி விழா: சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் அருள்பாலிப்பு
ADDED :1798 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் நான்காம் நாளான நேற்று சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், கந்தசஷ்டி விழாவின் நான்காம் நாளான நேற்று காலை 6:00 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், 9:00 மணிக்கு முருகப்பெருமான் சன்னதியில் வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு ஸ்கந்த ஹோமம், மஹா பூர்ணாகுதி, உற்சவ மூர்த்திக்கு லட்சார்ச்சனை, சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 20ம் தேதி கந்தசஷ்டி சூரசம்ஹாரம், மறுநாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.