பிறருக்கு கொடுக்க தயங்கக்கூடாது: இந்திரா செளந்தர்ராஜன் பேச்சு
மதுரை : மதுரை சொக்கிக்குளம் காஞ்சி காமகோடி பீடத்தில் மகா பெரியவரின் நட்சத்திர உற்ஸவமான அனுஷ வைபவத்தை முன்னிட்டு எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் குருமகிமை என்ற தலைப்பில் பேசியதாவது: மகாபெரியவர் வாழும் வழிமுறைகளை அனைவரும் புரியும் விதத்தில் கூறியவர். நாம் எதை கொடுக்கிறோமோ அதுதான் நமக்கு திரும்ப கிடைக்கும். பிறருக்கு நாம் கொடுக்க தயங்கக்கூடாது. தினமும் ஒரு நல்லது செய்வதை கடமையாக கொள்ள வேண்டும். நல்லது செய்திட காசு பணம் இருக்க வேண்டும் என்பதில்லை. தெருவில் கிடக்கும் ஒரு முல்லை கொடியை எடுத்து ஓரமாக போடுவதுகூட நல்ல காரியம்தான். இப்படி நாம் கொடுப்பவராக நல்லது செய்பவராக வாழ்வதே கூட ஒரு வித பூஜைதான். இவ்வாறு அவர் பேசினார். மடத்தின் தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் சுந்தர், பொருளாளர் குமார் ஸ்ரீராம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சூதவனேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை
சிவகங்கை காங்., எம்.,பி கார்த்தி பிறந்த நாளை முன்னிட்டு, கொத்தமங்கலம் மேலச்சிவன் கோயில் சூதவனேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. பிரசாதத்தை பூஜாரியிடம் இருந்து சினிமா தயாரிப்பாளர் கே.ஏ.சாய்சிதம்பரம், மாவட்டத் துணைத்தலைவர் பழ.காந்தி பெற்றுக்கொண்டனர்.