உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் இருமுடி செலுத்தலாம்

ராமநாதபுரம் ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் இருமுடி செலுத்தலாம்

ராமநாதபுரம் :ராமநாதபுரம் ஐயப்பன் கோயிலில் சபரிமலைக்கு செல்லமுடியாத பக்தர்கள் இருமுடி செலுத்தலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் காட்டுபிள்ளையார் கோயில் தெருவிலுள்ள ஐயப்பன் கோயிலில் சபரிமலையை போலவே 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கார்த்திகைமாதத்திலும் சபரிமலையில் நடைபெறும் பூஜைகள் போலவே தினமும் நடைபெறுகிறது. இவ்வாண்டும் கார்த்திகை முதல் தை 5ம் தேதி வரை பூஜைகள் நடக்கிறது. தற்போது கொரோனா பரவல் தடுப்பாக சபரிமலையில் குறைந்த அளவே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆகையால் அங்கு மகர, மண்டல பூஜைகளுக்கு செல்ல முடியாதபக்தர்கள் காட்டுபிள்ளையார் கோயில் தெருவிலுள்ள ஐயப்பன் கோயிலில் 18 படிகள் ஏறி இருமுடி செலுத்தி ஐயப்பசுவாமிக்கு நெய் அபிேஷகம் செய்யலாம் என குருசாமி காந்தி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !