சுகவனேஸ்வரர் கோவிலில் 2 மாதத்தில் கும்பாபிஷேகம்
ADDED :1801 days ago
சேலம்: சுகவனேஸ்வரர் கோவிலில், இரு மாதங்களில் கும்பாபிஷேகம் நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில் திருப்பணி நடந்து வருகிறது. நேற்று, அந்த கோவிலில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்து, திருப்பணி நடக்கும் பகுதியை பார்வையிட்டார். தொடர்ந்து, கோவில் அலுவலகத்தில், சேலம் மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் நடராஜன், உதவி கமிஷனர் உமாதேவி, எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடாஜலம், சக்திவேல் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடந்தது. அதில், கோவில் கும்பாபிஷேகத்தை இரு மாதங்களில் நடத்தும்படி, திருப்பணியை விரைந்து முடிக்க முடிவு செய்யப்பட்டது.