உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் நிலம் ஆக்கிரமித்தால் குண்டர் சட்டம் பாய வேண்டும்

கோவில் நிலம் ஆக்கிரமித்தால் குண்டர் சட்டம் பாய வேண்டும்

 திருப்பூர்:கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூசாரிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக கோவில் பூசாரிகள் நலச்சங்க மாநில தலைவர் வாசு கூறியதாவது:கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தாலும், எந்த மாற்றமும் இன்றி, ஆக்கிரமிப்பு தொடர்கிறது. கடுமையான சட்ட நடவடிக்கை இல்லாததே, இதற்கு முக்கிய காரணம்.கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்வோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, குறையும். மாநில அரசு, 17 நல வாரியங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், பூசாரிகள் நல வாரியம், ஆறாண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் உள்ளது.கோர்ட் உத்தரவுப்படி மாவட்டம் தோறும் பூசாரிகளுக்கு வழிபாட்டு முறை தொடர்பான பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !