காசி விஸ்வநாதர் கோவிலில் நடராஜர் சன்னதிக்கு கும்பாபிஷேகம்
ADDED :1797 days ago
திருப்பூர்: ஊத்துக்குளி ரோடு, காசி விஸ்வநாதர் கோவிலில் புதிய நடராஜர் சன்னதிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், மாணிக்கவாசகர் மற்றும் சிவகாமி அம்மையுடன் சிறப்பு அலங்காரத்தில் ஆடல் வல்லான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்தனர்.