உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேவுக பெருமாள் ஐயனார் கோவில் வைகாசி விழா துவக்கம்!

சேவுக பெருமாள் ஐயனார் கோவில் வைகாசி விழா துவக்கம்!

சிங்கம்புணரி : சிங்கம்புணரி சேவுக பெருமாள் ஐயனார் கோயிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோயிலில் ஐதீகமுறைப்படி வசூலுக்கு சென்ற விநாயகர் நேற்று காலை சந்திவீரன் கூடத்தில் இருந்து ரதத்தில் கோயில் வந்தடைந்தார். சேவுகப்பெருமாள், பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.யõக சாலை பூஜையுடன் கம்பத்தில் கொடி வளைதல் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து காப்பு கட்டும் நிகழச்சியுடன் விழா துவங்கியது. பூரணை புஷ்கலா சமேதசேவுகபெருமாள், பிடாரி அம்மன் பல்லக்கு, குதிரை, சிம்மம், பூதம், அனந்த சயன, வெள்ளி ரிஷப வாகனங்களில் திருவீதி உலா வருவார். ஜூன் 4 அன்று தேரோட்டமும், தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !