திருப்பதி கோவிலுக்கு ரூ.1.9 கோடி நன்கொடை வழங்கிய பக்தர்!
ADDED :4880 days ago
நகரி:திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு, பெயர் வெளியிட விரும்பாத பக்தர் ஒருவர், ஒரு கோடியே, 9 லட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கினார். திருமலையில், கடந்த வெள்ளியன்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுப்பிரமணியத்திடம், இதற்கான தொகையை டி.டி.,யாக வழங்கிய அந்த பக்தர், ஒரு கோடி ரூபாயை, வேதபரி ரக்ஷனா டிரஸ்டுக்கும், 9 லட்சம் ரூபாயை தேவஸ்தானம் செயல்படுத்தி வரும், உயிர் காக்கும் டிரஸ்டிலும் டெபாசிட் செய்யும்படி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார். பெங்களூருவை சேர்ந்த சுதாகர் என்பவரும், ஒரு லட்ச ரூபாயை அன்ன பிரசாத திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.