கவுசிக பாலசுப்ரமணியருக்கு திருக்கல்யாண உற்சவம்
ADDED :1781 days ago
புதுச்சேரி: கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.புதுச்சேரி ரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ள கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் 68ம் ஆண்டு கந்தர் சஷ்டி சூரசம்ஹார பெருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய உற்சவமான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் மாலை நடந்தது.தொடர்ந்து, வள்ளி தேவசேனா சமேத கவுசிக பாலசுப்ரமணியருக்கு திருக்கல்யாண உற்சவம் நேற்று காலை நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருக்கல்யாண உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.