சபரிமலை ஐயப்பன் பிரசாதம் வேண்டுமா...
ADDED :1781 days ago
மதுரை : மதுரை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் லட்சுமணன் தெரிவித்துள்ளதாவது: சபரிமலை ஐயப்ப சுவாமி பிரசாத பை பெற விரும்பும் பக்தர்கள் மதுரை தபால் கோட்ட வணிக வளர்ச்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். ரூ.450 செலுத்தினால் அரவணை பாயாசம், நெய், குங்குமம், மஞ்சள், விபூதி, அர்ச்சனை பிரசாத பை வழங்கப்படும். விவரங்களுக்கு 97886 85703ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.