கோவிந்தராஜ சுவாமி கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்!
ADDED :4881 days ago
நகரி:திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில், ஆண்டு பிரம்மோற்சவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.வரும், 4ம் தேதி வரை, தொடர்ந்து ஒன்பது நாட்கள், பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள், சிறப்பு வைபவமாக நடத்தப்படுகின்றன. துவக்க நாளான நேற்று, கோவிலில் மூலவரான கோவிந்தராஜ சுவாமிக்கு, அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள், ஆராதனை செய்தனர். பின், காலையில் பல்லக்கு சேவையிலும், மாலை ஊஞ்சல் சேவையிலும், சுவாமி உற்சவ மூர்த்தியாக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 7 மணிக்கு, சுவாமி உபதேவியருடன், பெரிய சேஷ வாகனத்தில் உற்சவராக, திருப்பதி மாட வீதியில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.