உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுத்தமல்லி ஜெய்மாருதி கோயிலில் இன்று 13வது ஆண்டு வேள்வி பூஜை!

சுத்தமல்லி ஜெய்மாருதி கோயிலில் இன்று 13வது ஆண்டு வேள்வி பூஜை!

திருநெல்வேலி : நெல்லை சுத்தமல்லி ஜெய்மாருதி கோயிலில் 13வது ஆண்டு வேள்வி மகா பூர்ணாஹூதி பூஜை இன்று (28ம் தேதி) நடக்கிறது. சுத்தமல்லி ஜெய்மாருதி ஆஞ்சநேயர் கோயிலில் 27 நட்சத்திரத்தை குறிக்கும் வகையில் 27 அடி உயர ராஜகோபுரமும், 12 லக்னத்தை குறிக்கும் வகையில் 12 அடி உயர ஆஞ்சநேயர் சிலையும், 9 கிரகங்களை குறிக்கும் வகையில் 9 ஆஞ்சநேயர் சிலையும், ராமபிரானின் பட்டாபிஷேக கோலமும், ஸ்ரீ ராமஜெயம் பொறித்த செங்கற்களால் கோபுரமும் ஸ்தாபிதம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. அக்னி நட்சத்திரம் இன்று (28ம் தேதி) நிறைவு பெறுவதை முன்னிட்டு 13வது ஆண்டு அக்னி நட்சத்திர வேள்வி இன்று நடக்கிறது. கடந்த 4ம் தேதி முதல் நடந்துவரும் தொடர் யாகத்தின் நிறைவு விழாவும், மகா பூர்ணாஹூதியும் நடக்கிறது. இதை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடக்கிறது. ஏற்பாடுகளை ஜெய்மாருதிதாசன் நாராயணன் மற்றும் ஜெய்மாருதி தர்மசேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !