சிவபிரம்மம் திருக்கூட்டம் நடத்திய திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி!
ADDED :4928 days ago
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில், சிவபிரம்மம் திருக்கூட்டம் நடத்தும் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.சிவபிரம்மம் திருக்குன்றம் தாமோதரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சென்னை, மதுரை, கோவை, தஞ்சாவூர் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவத்தொண்டர்கள், சிவனடியார்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, திருவாசகத்தை ஒருமித்த குரலில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து பாடினர். நிகழ்ச்சியில் சிதம்பரம் ஸ்ரீலஸ்ரீ மவுனகுரு சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருப்பனந்தாள் சன்னிதான சுவாமிகள், தருமபுரம் இளைய மடாதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.