கடலில் வீசப்பட்ட வலை
ADDED :1810 days ago
கடலில் வீசப்பட்ட வலை நல்ல மீன்களையும், கெட்ட மீன்களையும் இழுத்து வரும். நல்லவை கூடையில் சேர்க்கப்படும், கெட்டவை வெளியே கொட்டப்படும். இந்த உவமையை வலைதளத்துடன் நாம் ஒப்பிடலாம்.
டிஜிட்டல் தகவல்களை சகட்டு மேனிக்கு அள்ளிக் கொண்டு வந்து நம் முன் கொட்டுகிறது. அவற்றிலிருந்து நல்லவற்றை தேர்ந்தெடுத்து நினைவில் வைக்க வேண்டும், கெட்டவற்றை தள்ளி விட வேண்டும். அப்போதுதான் வாழ்வு பயனுடையதாக இருக்கும். நல்லவற்றை நிராகரித்து விட்டு தீயவற்றைத் தேர்ந்தெடுத்தால் வலைதளம் கழுத்தை இறுக்கும் கயிறாக மாறும்.