ஆறெழுத்தின் அருள்
ADDED :1934 days ago
நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறிகள் முருகனின் பிறப்புக்கு கருவாக அமைந்ததால் அவர் ‘அக்னி கர்ப்பன்’ எனப்பட்டர். அப்பொறிகள் கங்கையில் தவழ்ந்ததால் ‘காங்கேயன்’ என்ற பெயர் வந்தது. சரவணப்பொய்கையில் வளர்ந்ததால் ‘சரவணபவன்’ எனப்பட்டார். இதுவே முருகனுக்கு மந்திரப்பெயராக விளங்குகிறது. பக்தர்கள் ஆறெழுத்து மந்திரமான ‘ஓம் சரவணபவ’ என்னும் ஆறெழுத்தை ஜபிப்பர். குழந்தை வடிவில் இருந்த ஆறுகுழந்தைகளை வளர்க்கும் பணியில் கார்த்திகைப்பெண்கள் ஈடுபட்டனர். அவர்களின் பெயரால் முருகனுக்கு ‘கார்த்திகேயன்’ என்ற பெயர் ஏற்பட்டது. பிள்ளையைக் காண வந்த பார்வதி அன்போடு குழந்தைகளை ஒன்று சேர்த்து அணைத்து மகிழ்ந்தாள். ஆறுமுகமும் ஒன்றாகி ‘கந்தன்’ (ஒன்றுசேர்ந்தவன்) என பெயர் பெற்றார்.