பெருமாள் கோவிலுக்கு உற்சவ குடை வழங்கும் விழா
ADDED :1823 days ago
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னிமடையில் பெருமாள் கோவில்களுக்கு உற்சவ குடை வழங்கும் விழா நடந்தது.
காரமடை கோவிந்தராஜ் பஜனை குழுவினர் சார்பில், மேல்முடி அரங்கநாதர் திருக்கோவிலுக்கும், தடாகம் பெருமாள் கோவிலுக்கும் தலா ஒரு உற்சவ குடை வழங்கப்படுகிறது. இதற்கான விழா துடியலூர் அருகே பன்னிமடையில் உள்ள ரங்கநாயகி சீனிவாச பெருமாள் கோவில் வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி, பெண்களின் ஒயிலாட்ட நிகழ்ச்சியும், கிருஷ்ணர் வேடமணிந்து பஜனை நிகழ்ச்சியும் நடந்தது. உற்சவ குடைகள் சிறப்பு விழாக்காலங்களில், சுவாமி திருவீதி ஊர்வலத்தின் போது பயன்படுத்தப்படும்.