விஜயவாடா கனகதுர்கை
ADDED :1810 days ago
கிருஷ்ணா நதிதீரத்தில் உள்ள ஒரு முக்கியமான நகரம். நிலவளம், நீர்வளம் தொழில்வளம் ஆகிய எல்லாச் சிறப்புகளோடு, இது ஒரு திவ்ய க்ஷேத்திரமாகவும் திகழ்கிறது. இங்கு மதுரை மீனாட்சியம்மன் சன்னிதியைப் போன்று, எப்போதும் பக்தர்கள் கூட்டம் ஜே ஜே என்றிருக்கும். அர்ஜுனன் தவம் புரிந்து பாசுபதாஸ்திரம் பெற்ற ஸ்தலம் இது. ஸ்தலத்தில் முக்கிய சன்னிதியாகத் திகழும் கனகதுர்கை கோயில், ஒரு சிறு குன்றின் மீது இருக்கிறது.