உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எந்தக் கிழமையில் நந்தியைச் சந்தித்தால் என்ன பலன்?

எந்தக் கிழமையில் நந்தியைச் சந்தித்தால் என்ன பலன்?


பிரதோஷம் என்பது வாரத்தின் ஏழு கிழமைகளில் ஏதேனும் ஒவ்வொரு கிழமைகளில் தான் ஒவ்வொரு முறையும் வருகின்றது எந்தக் கிழமை பிரதோஷத்தில் சென்று நாம் நந்தியையும், உமா மகேஷ்வரரையும் வழிபட்டு வருகின்றோமோ, அதற்கேற்ப பலன்களை நாம் பெற முடிகிறது.

1. ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதோஷத்தில் நந்தியையும், நாயகனாம் சிவபெருமானையும் வழிபட்டு வந்தால் மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழி பிறக்கும். சுபகாரியங்கள் நடைபெறும்.
2. திங்கட்கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் மனச் சஞ்சலங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும். நல்லெண்ணங்கள் உருவாகும்.
3. செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் உணவுப் பற்றாக்குறை அகலும். உத்யோக வாய்ப்பும், உதிரி வருமானங்களும் பெருகும்.
4. புதன்கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் புத்திர விருத்தியும், ஆண் சந்தான பாக்கியமும் கிட்டும்.
5. வியாழக்கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் படிப்புத்தடை அகலும், கல்வி ஞானம் பெருகும் மதி நுட்பத்தினால் மகத்துவம் காண்பீர்கள்.
6. வெள்ளிக்கிழமை வரும் பிரதோஷ வழிபாட்டினால் பகை விலகும். பாசம் கூடும். உறவினர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
7. சனிக்கிழமை வரும் பிரதோஷ வழிபாட்டினால் சகல பாக்கியங்களும் கிடைக்கும். எல்லா பிரதோஷங்களிலும் வழிபாடு செய்வதும் இனிமையான வாழ்க்கையை ஏற்படுத்தி தரும், நல்ல வாழ்க்கை அமைய நந்தியை நாடுவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !