மதுரையில் கோயில் யானைகளுக்கு தடுப்பூசி
ADDED :1875 days ago
மதுரை : மதுரை மண்டல கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கோயில் யானைகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. கால்நடை இணை இயக்குனர் ராஜதிலகன் உத்தரவின் பேரில் நோய் புலனாய்வு உதவி இயக்குனர் சரவணன் முகாமை மேற்பார்வையிட்டார். கால்நடை உதவி டாக்டர்கள் முத்து ராமலிங்கம், கங்கா சூடன், உமா மகேஸ்வரி ஆகியோர் மீனாட்சி அம்மன் கோயில் பார்வதி, அழகர்கோயில் சுந்தரவள்ளி தாயார் யானைகளை பரிசோதனை செய்தனர். யானைகளுக்கு கொரோனா, உடல் நிலை குறித்தும் பரிசோதனை செய்யப்பட்டுஆந்தராக்ஸ் மற்றும் நோய் தடுப்பூசிகள் போடப்பட்டது.