உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்

சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்

சாத்துார்: சாத்தூர் சடையம் பட்டி சாய்பாபா காலனியில் சீரடி சாய்பாபா கோவில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். சீரடி சாய்பாபா திருக்கோவிலில் புதிய பிரம்மாண்ட சாய்பாபா திருவுருவச் சிலையும்ஸ்ரீ நரசிம்ம சுவாமி சிலையும் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நேற்று காலை 12:00 மணி அளவில் நடந்தது முன்னதாக காலை 6:30 மணிக்கு ,மகா கணபதி ஹோமம் விநாயகர் பூஜை மற்றும் விக்னேஸ்வர பூஜை திருமுறை பாராயணம் யாகசாலை பூஜை நடந்தது. யாத்ரா தானம், கடம் புறப்பாடு புதிய கோபுரம் நிறுவனம் புதிய பிரம்மாண்ட பாபாவின் சிலை பிரதிஷ்டை யோடு , கும்பாபிஷேகம் அலங்காரம், ஆரத்தி நடந்தது. எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் எம்.எல்.ஏ., கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி வழிபட்டார். பகல் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அமைச்சர் கடம்பூர் ராஜு மாலையில் சுவாமி தரிசனம் செய்தார். சீரடி சாய்பாபா பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !