உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி சித்த விநாயகர் கோவில் முதலாம் ஆண்டு விழா

சக்தி சித்த விநாயகர் கோவில் முதலாம் ஆண்டு விழா

பெ.நா.பாளையம்: சின்னத்தடாகம் அருகே தடாகம் புதூர் மற்றும் உஜ்ஜையனூரில் உள்ள சக்தி சித்த செல்வவிநாயகர் கோயில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. இக்கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா இன்று மாலை, 4.00 மணிக்கு மேல், 7.00 மணிக்குள் இக்கோவிலில் நடக்கிறது. விழாவையொட்டி, கலச மற்றும் ஹோமங்கள பூஜைகள், அபிஷேக அலங்கார பூஜைகள் நடக்கின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை தடாகம் புதூர் மற்றும் உஜ்ஜையனூர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !