உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சகாயமாதா ஆலய விழா

சகாயமாதா ஆலய விழா

இளையான்குடி :  சாத்தமங்கலம் புனித சகாயமாதா ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடந்தது. ஆலய விழா கடந்த 18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. குண்டுகுளம் பங்குபாதிரியார் சூசை மைக்கேல்ராஜ் தலைமை வகித்தார். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தேர்பவனி, கலைநிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று 10.30 மணிக்கு நன்றி திருப்பலியுடன் விழா நிறைவு பெற்றது. சாத்தமங்கலம், குண்டுகுளம் பங்கு இறை மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !