உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி மகாலிங்கம் கோயிலில் மே 31ல் மகா கும்பாபிஷேகம்!

சதுரகிரி மகாலிங்கம் கோயிலில் மே 31ல் மகா கும்பாபிஷேகம்!

மதுரை: சதுரகிரி சந்தன மகாலிங்கம் கோயில் கும்பாபிஷேகம் மே31ல் நடக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் வனப்பகுதியான சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தகிரி மலைகளுக்கு நடுவில் சதுரகிரி அமைந்துள்ளது. அகத்தியருக்கு சிவன் திருமணக்கோலத்தில் காட்சி தந்ததால் பூலோக கைலாயம் என்ற சிறப்புடையது. 18 சித்தர்களும் இங்கு சிவனை பூஜிப்பதாக ஐதீகம். இங்குள்ள சிவனுக்கு, பார்வதிதேவி சந்தனம் சாத்தி வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. இங்கு மே31ல் மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. நேற்று காலை 6மணிக்கு அனுக்ஞை பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து விநாயகர் பூஜை, கணபதிஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரகஹோமம், மாலை 5மணிக்கு வாஸ்துசாந்தி, ர÷க்ஷõகண ஹோமம், பிரவேசபலி, அங்குரார்ப்பணம், ரக்ஷõபந்தனம் ஆகியவை நடக்கிறது. மே29 காலை 8க்கு தீர்த்த சங்கிரகனம், அக்னி சங்கிரகனம், அஷ்டாதச கிரியையும், மாலை 7மணிக்கு முதல்கால யாகபூஜையும் நடக்கிறது. மே 30 காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜையும், 10மணிக்கு பரிவாரங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதலும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜையும் நடக்கிறது. மே 31 காலை 6 மணிக்கு நான்காம் கால யாகபூஜையும், கடம் புறப்பாடும் நடக்கிறது. 8.30-9 மணிக்குள் விமானம், பரிவாரதெய்வம், சந்தனமகாலிங்க சுவாமி கும்பாபிஷேகம் நடக்கும். 11 மணிக்கு சண்டஹோமம், மாலை 3 மணிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. விழாநாட்களில் சதுரகிரி சித்தர்கூடம் மற்றும் அகத்தியர் அறக்கட்டøளை சார்பில் அன்னதானம் நடக்கிறது. யாகபூஜையை சென்னை காசி விஸ்வநாதர் கோயில் ஆகம பிரவீணர் கார்த்திகயே சிவாச்சாரியார், சதுரகிரி சுப்புராம் பூஜாரி ஆகியோர் நடத்துகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறநிலையத்துறை துணை ஆணையர் செந்தில்வேலவன், கோயில் நிர்வாக அதிகாரி ஜவகர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !