நாளை இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரஹணம்
ADDED :1828 days ago
சென்னை:இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரஹணம், நாளை நிகழ உள்ளது. அன்று மதியம், 12:59 மணிக்கு துவங்கும் சந்திர கிரகணம், மாலை, 5:22க்கு நிறைவடையும்.
இந்த சந்திர கிரஹணம் இந்தியாவில் தெரியாது. எனவே, இது புற நிழல் சந்திர கிரஹணமாக கருதப்படும். ஆஸ்திரேலியா, பசிபிக் பெருங்கடல் மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் தெரியும் என, பிர்லா கோளரங்க இயக்குனர், சவுந்திரராஜ பெருமாள் கூறினார்.ஒவ்வொரு சூரிய, சந்திர கிரஹணம் நடைபெறும் போதும், அது, ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையிலும் நல்ல, கெட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். சந்திர கிரஹணத்தின் போது, மக்கள் தவிர்க்கக்கூடிய செயல்களை, இந்த புற நிழல் சந்திர கிரஹணத்தின் போது, தவிர்க்க வேண்டிய அவசியமில்லை என, ஜோதிடர்கள் தரப்பில் கூறப்படுகிறது.