மாமல்லபுரம் ஸ்தலசயனருக்கு தைலகாப்பு
ADDED :1828 days ago
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், 108 வைணவ கோவில்களில், 63ம் கோவில்.விஜயநகர பேரரசு காலமான இக்கோவிலில், மூலவர் ஸ்தலசயனர், நிலத்தில் படுத்து, சயன தோற்றத்தில், சுதை சிலையாக அருள் பாலிக்கிறார். சிலையை, பராமரித்து பாதுகாக்க, ஆண்டுதோறும், இதற்கு தைலகாப்பு சாற்றப்படும். தற்போது, நாளை மாலை, கார்த்திகை தீபவிழாவை கொண்டாடி, இரவு, சுவாமிக்கு, சாம்பிராணி தைலகாப்பு சாற்றப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியான, டிச., 25 வரை, இக்காப்பு நீடிப்பதால், பக்தர்கள், சுவாமி திருமுகத்தை மட்டுமே, தரிசிக்க இயலும்.