கமுதக்குடி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
ADDED :1775 days ago
பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி ஸ்ரீ சுந்தரவள்ளி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இக் கோயிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி பஞ்ச குண்ட யாகசாலை அமைக்கப் பட்டது. கும்பாபிஷேகத்தை மணிகண்டன் சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். இதன்படி நவ., 26 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு கோயில் மூலவர் விமானக் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் மூலவர் சுந்தரவள்ளி அம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தன. விழாவில் ஆதிசிவ சக்தி அம்மன் ஞானபீடம் அகோர சித்தர், கருணாநிதி சுவாமிகள், மதுபாலன் சுவாமிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கமுதக்குடி ஆலய நிர்வாக பூசாரிகள் மற்றும் கமுதக்குடி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.