திருவேடகத்தில் வைகை நதிக்கு பூஜை
ADDED :1801 days ago
சோழவந்தான் : சோழவந்தான் திருவேடகம் வைகை ஆற்று படித்துறையில் திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சி மையம் சார்பில் வைகை நதிக்கான பூஜை நடந்தது. சுவாமி சிவயோகனந்தா சிறப்பு பூஜைகளை செய்து திரு ஏடு எதிர் ஏறி உற்ஸவம், வைகையின் வரலாறு குறித்து சொற்பொழிவாற்றினார். 108 வைகை போற்றி படிக்கப்பட்டது. திருவிளையாடல் புராணம் மைய தலைவர் சந்திரசேகரன், செயலாளர் டாக்டர் கண்ணன்,அமைப்பாளர் முருகேசன், சங்கரநாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.