ராமநாதபுரம் ஐயப்பன் கோயிலில் இருமுடி செலுத்திய பக்தர்கள்
ADDED :1801 days ago
ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஐயப்பன் கோயிலில் உள்ளூர், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பக்தர்கள் 18 படிகள் ஏறி இருமுடி செலுத்தி வழிபட்டனர்.
ராமநாதபுரம் காட்டுபிள்ளையார் கோயில் தெரு ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாள் மண்டல, மகர பூஜை விழா கணபதி ேஹாமத்துடன் தொடங்கியது. கேரள சபரிமலையில் உள்ளது போல இங்கு 18 படிகள், ஐயப்பனுக்கு நித்யபூஜை, நெய் அபிஷேகம் நடக்கிறது. சபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்கள் இங்கு இருமுடி செலுத்த கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.நேற்று ராமநாதபுரம் சுற்றுப்பகுதி, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பக்தர்கள் கோயில் வளாகத்தில் பஜனை செய்து, ஐயப்பனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து, 18 படிகள் ஏறி நேர்த்திக்கடன் செலுத்தினர். வரும் ஞாயிறு (டிச.13ல்) 108 சங்காபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து 2021 ஜன.,18 வரை மண்டல மகர பூஜை நடைபெறுகிறது.