திருப்பூர் ஐயப்பன் கோவிலில் சங்காபிஷேக பூஜை
ADDED :1801 days ago
திருப்பூர்: திருப்பூர், காலேஜ் ரோடு, ஸ்ரீஐயப்பன் கோவிலில், 108 வலம்புரி சங்காபிஷேக பூஜை நடந்தது. திருப்பூர், ஸ்ரீஐயப்பன் கோவிலில், 61வது மண்டல பூஜை, கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், மிகுந்த கட்டுப்பாடுகளுடன் பூஜை நடந்து வருகிறது. ஊர்வலம் உள்ளிட்ட மக்கள்கூடும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோவிலில் நேற்று, 108வலம்புரி சங்காபிஷேக பூஜை நடந்தது. ஐயப்பன் கோவில் வளாகத்தில், சிறப்பு யாகபூஜையுடன், சங்காபிஷேக அர்ச்சனைகள் துவங்கின. பூஜை நிறைவு பெற்றதும், சங்குகளில் இருந்த தீர்த்தம், ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.