பாவத்தொழில் வேண்டாம்
ADDED :1799 days ago
ஒருமுறை வானுலகம் சென்ற நாயகம், சிலர் கூட்டமாக நிற்பதைக் கண்டார். அவர்களது வயிறு கண்ணாடி போல காட்சியளித்தது. அதற்குள் ஏராளமான பாம்புகள் வளைந்து கொண்டிருந்தன. அங்கிருந்த வானதுாதரிடம் காரணம் கேட்டார்.
‘‘பாவத்தொழிலில் ஈடுபட்டவர்கள் இவர்கள். வட்டி வாங்கி வாழ்வு நடத்தியவர்கள்’’ என பதில் கிடைத்தது.
வட்டியால் கிடைக்கும் லாபத்தில் பூமியில் வேண்டுமானால் சுக வாழ்வு வாழலாம். ஆனால் இறந்த பிறகு வட்டி கட்டியவரின் வயிற்றெரிச்சல் பாம்புகளாக மாறி வயிற்றில் குடியேறும் என்பதை மறக்க வேண்டாம்.