உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நரிக்குறவர் குடும்பங்களுக்கு நிவரண உதவி வழங்கிய ராமகிருஷ்ணா மடம்

நரிக்குறவர் குடும்பங்களுக்கு நிவரண உதவி வழங்கிய ராமகிருஷ்ணா மடம்

தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடி யில் சுமார் 100 நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தொடர்ந்து பெய்ந்த மழையால் அவர்கள் வீடுகள் கூரைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , கொரோனோ நோய் தொற்று மற்றும் தொடர் மழை காரணமாக, வேலை செல்ல முடியாமல்  உணவுக்கு சிரமப்படுவதாகவும் தெரிவித்தனர் .

இதை அறிந்த தஞ்சை ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் நேற்று நேரில் சென்று அனைவருக்கும் உணவு வழங்க ஏற்பாடு செய்தார் .தொடர்ந்து அங்கு வசிக்கும் நரிக்குறவர் குடும்பங்களின் கோரிக்கைகளை ஏற்ப மழையால் ஒழுகும் வீடுகளை பாதுகாக்க தார்பாய், 1.25 ரூபாய் மதிப்பிலான, ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை  வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை சேவா பாரதி யின் கோட்டத் தலைவர் கேசவன், மாவட்டத்தலைவர்  கோவிந்தராஜூ, எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர், பாரதிமோகன், வடிவேலு மற்றும் தன்னார்வலர்கள் உடனிருந்து செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !