/
கோயில்கள் செய்திகள் / திருத்தணி கோவில் கட்டப்பட்டுள்ள முடிக்காணிக்கை மண்டபம்; முதல்வர் திறந்து வைப்பு
திருத்தணி கோவில் கட்டப்பட்டுள்ள முடிக்காணிக்கை மண்டபம்; முதல்வர் திறந்து வைப்பு
ADDED :1802 days ago
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், புதியதாக, 95 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட முடி காணிக்கை மண்டபத்தை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
திருத்தணி முருகன் மலைக்கோவில் வாகன நிறுத்தம் இடத்தில் பக்தர்கள் வசதிக்காக, 95 லட்சம் ரூபாய் மதிப்பில், நவீன முடி காணிக்கை மண்டபம் புதியதாக கட்டப்பட்டது.கொரோனா தொற்று காரணமாக, எட்டு மாதங்களாக இந்த மண்டபம் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று, முடி காணிக்கை மண்டபத்தை, தமிழக முதல்வர் இ.பி.எஸ்., காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.அதை தொடர்ந்து, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் பழனிகுமார் ஆகியோர் முன்னிலையில், மண்டப வளாகத்தில் கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.இதையடுத்து, பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.