ராஜகணபதி கோவில் உண்டியலில் காணிக்கையாக ரூ.17.36 லட்சம்
ADDED :1802 days ago
சேலம்: சேலம், ராஜகணபதி கோவில் உண்டியல் மூலம், 17.36 லட்சம் ரூபாய் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியன வருவாயாக கிடைத்தது. சேலம், ராஜகணபதி கோவில் உண்டியல் எண்ணும் பணி, சுகவனேஸ்வரர் கோவில் வளாகத்தில் உதவி கமிஷனர்கள் உமாதேவி, சரவணன், ஆய்வாளர் மணிமாலா, ஊழியர்கள் ஜோதிமாலா, வன்னியர் திலகம் ஆகியோர் முன்னிலையில், பேங்க் ஆப் இந்தியா ஊழியர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில், 17 லட்சத்து, 36 ஆயிரத்து, 406 ரூபாய், 18 கிராம் தங்கம், 350.300 கிராம் வெள்ளி ஆகியன வருவாயாக கிடைத்தது. செப்.,7ல் உண்டியல் எண்ணப்பட்ட போது, எட்டு லட்சத்து, 97 ஆயிரத்து, 885 ரூபாய் வருவாயாக கிடைத்த நிலையில், நேற்று கடந்த முறையை விட, எட்டு லட்சத்து, 38 ஆயிரத்து, 521 ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைத்து இருப்பது, கோவில் ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.