ஐயப்ப பக்தர்கள் பஜனை ஊர்வலம்
ADDED :2102 days ago
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் வில்லாளி வீரன் ஐயப்ப பக்த பஜனை சேவா சங்கம் சார்பில் நடக்கும் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜையை முன்னிட்டு ஐயப்ப பக்த பஜனை குழுவை சேர்ந்தவர்கள் முக்கிய வீதிகளில் மேள தாளம் முழங்க, பக்தி பாடல்கள் பாடியபடி ஊர்வலம் சென்றனர். பக்தர்கள் நேர்த்தி கடனாக அன்னதானத்திற்கு தேவையான அரிசி மூடைகள், மளிகை பொருட்களை வழங்கினர். நிகழ்ச்சியை முன்னிட்டு ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பூஜைகள், பஜனை நடந்தது.