அமாவாசை : அக்னிதீர்த்தக் கடலில் நீராட தடை
ADDED :1839 days ago
ராமேஸ்வரம்: இன்று (டிச.,14) கார்த்திகை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராட, பூஜை செய்ய போலீசார் தடை விதித்தனர்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் தை, மாசி, ஆடி அமாவாசை நாளில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவார்கள். தற்போது கொரோனா பரவலை தடுக்க அமாவாசை தினத்தில் கடலில் நீராட தடை விதிக்கப்பட்டது. அதன்படி கார்த்திகை அமாவாசை தினமான இன்றும் அக்னி தீர்த்த கடலில் நீராட தடை விதித்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர். ----