உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஓசூர்: தேன்கனிக்கோட்டையில், கனகதாசர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, கனகஜோதி சேவா சமிதி சார்பில், 533வது ஆண்டு கனகதாசர் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்க, தேன்கனிக்கோட்டை முக்கிய வீதிகளில், கனகதாசர் பல்லக்கு உற்சவம் மற்றும் பெண்கள், கும்ப கலசத்துடன் ஊர்வலமாக சென்றனர்.

தொடர்ந்து, கனகதாசர் படத்துக்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் ஏழு தம்பதியருக்கு இலவச திருமணம், ரத்ததான முகாம் ஆகியவை நடத்தப்பட்டன.தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே, பிற்பகல், 3:00 மணிக்கு குரும்பர் இன மக்கள், தங்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கர்நாடக மாநில அமைச்சர் ஈஸ்வரப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !