உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்து மலையில் திடீர் தீபம்

திருப்பரங்குன்றத்து மலையில் திடீர் தீபம்

 திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு சிலர் துணியால் தீபம் ஏற்றினர். சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீப திருவிழாவின்போது மலைமீது உச்சி பிள்ளையார் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.கடந்த நவ.,29ல் தீபம் ஏற்றப்பட்டது.மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் முன்பு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அதைப்போல் தற்போதும் அந்த தீபத் துாணில்கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என ஹிந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்து, ஆண்டுதோறும் தீபத்திருவிழா அன்று ஆர்ப்பாட்டம் செய்வர்.நேற்று அதிகாலை எண்ணெய்யில் நனைத்த துணியை தீபத்துாண் மீது வைத்து சிலர் தீபம் ஏற்றிவிட்டு சென்றனர்.இதுகுறித்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !